அவுங்களுக்கே 20 சீட் தான்., இதுல இவுங்களுக்கு 10 - 15க்கு மேல வேணுமாம்.! தலைமைக்கு தலைவலியை உண்டாக்கிய தலைவர்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தது.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக நேற்றைய பேச்சுவார்த்தையில் சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், "சட்டப்பேரவை தேர்தலில் எண்களின் கூட்டணித் தலைமை திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டு வற்புறுத்துவோம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திமுக 190 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதம் உள்ள இடங்களில் 10 கட்சிகளுக்கு பிரித்து கொடுக்குமா இல்லை., பிச்சு கொடுக்குமா திமுக என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk cpim alliance feb 26


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->