திமுகவினர் மத்தியில் புகைச்சல்.. திடீரென கிளம்பிய பூகம்பம்...கோபத்தில் உடன்பிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல், கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இம்மாதம் 2ம் தேதி மற்றும் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதிவுகளில் 272 மாவட்ட கவுன்சிலர் இடத்தை திமுக கூட்டணியும், 240 இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. 

அதேபோல் 5091 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், திமுக கூட்டணி 2356 ஒன்றிய கவுன்சிலர் இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியது. 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய ஒன்றியமான ஒட்டப்பிடாரத்தில் 22 வார்டுகளில் 15 வார்டை திமுக கூட்டணி கைப்பற்றியது. அப்பகுதியை சேர்ந்த எம்எல்ஏ சண் முகையாவின் மனைவி சுகிர்தா, மருமகன் ராஜேஷ் ஆகிய இருவரும் வெற்றி பெற்ற வெற்றி பெற்றனர்.

எம்எல்ஏ தனது உறவுகளுக்கு சேர்மன் பதவியை பெற முயற்சி செய்து வருகிறார். இதனால் மற்ற திமுக கவுன்சிலர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk councilor angry to dmk mla


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->