50 க்கு 20 ஆ., வெறுத்துப்போன காங்கிரஸ்.! பரிதாபத்தில் விசிக.! தெறிக்கவிடும் திமுக.!   - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக நேற்றைய பேச்சுவார்த்தையில் சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிகிறது.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தது.

வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று திமுக தலைமை சொல்லி வருகிறது. இந்நிலையில், நேற்று திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பாக, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே எஸ் அழகிரி, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் துரைமுருகன், கனிமொழி, இளங்கோவன், ஆர் எஸ் பாரதி உள்ளிட்டவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் 50 தொகுதிகள் கேட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் திமுக சார்பில் 20 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2011 தேர்தலில் 63 தொகுதிகளும், 2016 தேர்தலில் 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 20 தொகுதிக்கு மேல் ஒதுக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இந்த நிலை எனில், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளின் நிலை பரிதாபம் தான் என்று அடிப்பட தொடங்கியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk congress alliance seat issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->