எங்களுக்கு 80 தொகுதி., திமுக கூட்டணியில் பெரும் கொந்தளிப்பு! உருவாகிறது மூன்றாவது கூட்டணி?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு, மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தற்போது முதலே தயாராகி வருகின்றன.

கடந்த வாரம் திமுக இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுத்துள்ளது. மேலும் இந்த உறுப்பினர் சேர்க்கையில் முதல் நாள் மட்டும் 30,000 பேர் இணைந்து உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதேபோல், இரு தினங்களுக்கு முன்பு அதிமுக அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்காக  முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில், அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, தாங்கள் வெற்றி பெற வாய்ப்பாக உள்ள 80 தொகுதிகளின் பட்டியலை தயாரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வெளியான தகவலின்படி, இந்த 80 தொகுதிகளின் பட்டியல் காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்ப உள்ளதாகவும், திமுகவிடம் குறைந்தபட்சம் 60 தொகுதிககளையாவது கேட்டுப் பெற வேண்டும் என காங்கிரஸ் தீர்க்கமாக உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த 60 தொகுதிகளில் குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா ஐந்து தொகுதிகளும், கன்னியாகுமரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் 4 தொகுதிகளும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் கட்சி கேட்டு பெற உள்ளதாகவும் வெளியான தகவல் தெரிவிக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் 60 தொகுதிகள் கேட்டால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஒற்றை இலக்கம் தான் என்பது உறுதி. ஏற்கனவே, திமுக குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் போட்டியிட முனைப்பு காட்டுவதாக வெளியான தகவலால், தற்போது திமுக கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பு உண்டாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால், காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது கூட்டணி உருவாகலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk congress alliance issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->