வைகோவை வைத்து காங்கிரஸை கழட்டி விட நினைக்கும் திமுக!! வெளியான தகவல்!! - Seithipunal
Seithipunal


அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் இருந்த சிறப்பு சட்டம் 370 ஐ ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் முதல் துரோகி, பாஜக இரண்டாவது  துரோகி என பகிரங்கமாக எதிர்த்தார். 

அவருடைய எதிர்ப்புக்கு இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே எஸ் அழகிரி, வைகோ நேரத்திற்கு ஏற்றாற்போல் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி என கடுமையாக விமர்சித்தார். மேலும் அவரை தொடர்ந்து முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், கள்ளத் தோணி நாயகர் என்ற பட்டத்தில் இருந்து தற்போது துரோகி நம்பர் ஒன் என்ற பட்டத்திற்கு வைகோ உயர்ந்துள்ளார் என விமர்சித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைமை மேலே காங்கிரசுக்கு வருத்தம் இருப்பதாக தகவல் பரவியது. அதாவது கூட்டணியின் தலைமை என்ற வகையில் தி.மு.க. ஏன் இன்னும் வைகோவிடம் விளக்கம் கேட்கலை என்பது காங்கிரஸ் தரப்பின் ஆதங்கம் என சொல்லப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு டெல்லி சென்ற வைகோ, பாஜகவின் முன்னனி தலைவர்களைச் சந்தித்தாரே தவிர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், ராகுல்காந்தியையும் சந்திக்க முயற்சி செய்யவில்லை என காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் கூறுகின்றனர். 
 
இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், வைகோ மூலம், தங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸை திமுக கழற்றிவிடப் முயற்சி செய்கிறதா என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால் இது குறித்து  திமுகவின் முன்னனி தலைவர்கள் கூறுவது, வைகோவின் அரசியல் என்பது தனிப்பட்டது. அவரின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையிலும் திமுகவால் எப்படி கேள்வி எழுப்ப முடியும். அதனால் தற்போதைக்கு இந்த பிரச்சனையை கூட்டணி கட்சிகள் பெரிதாக எடுக்காமல் இருக்கலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk congress allaince issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->