திமுகவின் கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து எடுத்த முடிவு.!  - Seithipunal
Seithipunal


தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ-எம்.எல் கட்சியின் பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேபப்ரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா ஆகியோர் கூட்டாக இணைந்து விவசாயிகள் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், "கடுமையான அடக்குமுறை, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பெரிய தீயணைப்பு குழாய்கள் மூலம் தண்ணீர் பீச்சியடிப்பு, சாலையில் தடை, போலீஸார் சாலைத்தடுப்புகள் அமைத்து விவசாயிகளுக்கு எதிராக நடத்திய அடக்குமுறை போரை தொடங்குவது போன்று உள்ளது.

லட்சக்கணக்கான விவசாயிகள் வெற்றிகரகமாக டெல்லியை அடைந்துவிட்டார்கள், அவர்களது தைரியத்துக்கும் துணிவுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். பிற்போக்குத்தனமான விவசாய கொள்கையை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.

போராடும் விவசாயிகள் அமைதியாக தங்கள் கோரிக்கையை வைக்க டெல்லி நோக்கி வந்த உங்களை தடுக்க முயன்ற மத்திய அரசின் நடைமுறையை பின் வாங்கச்செய்து இன்று ஒரு இடத்தில் போராட அனுமதி பெற்ற வலிமையை பாராட்டுகிறோம்.

அதே நேரம் தற்போது கொடுக்கப்பட்டுள்ள மைதானம் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட இடமில்லாத வகையில் நெருக்கடியான ஒன்று. ஆகவே போராடும் விவசாயிகளுக்கு டெல்லி ராம்லீலா மைதானத்தை போன்ற பெரிய மைதானம் அல்லது ராம்லீலா மைதானத்தை ஒதுக்கி அவர்கள் அமைதியாக போராட வேண்டிய உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

உணவுப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும், குறைந்தபட்ச ஆதார விலை நீக்கிய, இந்திய வேளாண் துறையை, உணவு வழங்குகிற விவசாயிகளை அழிக்கும் புதிய விவசாய கொள்கையை எதிர்க்கிறோம் என்பதை மீண்டும் பதிவு செய்கிறோம். அதே வேளையில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க மத்திய அரசு முன்வரவேண்டும்"


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk coalition parties decision


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->