ஒரு எம்எல்ஏவை இழக்கப்போகும் அதிமுக.? பேரதிர்ச்சியில் அதிமுக தலைமை.!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியிலும், அதிமுக 09 தொகுதியிலும் வெற்றி பெற்றது.

அதில் சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராஜவர்மனும், திமுக சார்பில் சீனிவாசனும் போட்டியிட்டனர். அதில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் 456 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். 

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள். ஒப்புகை சீட்டுகளையும்  முழுமையாக எண்ணி சரிபார்க்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அதிமுக ஒரு எம்எல்ஏவை இழந்து சட்டமன்றத்தில் பலம் குறைந்துவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk candidate case for admk mla


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->