கொரோனா நிதி பிரச்சனை: உள்ளே புகுந்து அரசியல் செய்யும் அந்த 2 கட்சிகள்.! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்னால் திராவிட முன்னேற்ற கழகம் கரோனா வைரஸ் நோய்தொற்றை தடுப்பதற்கு ரூபாய் ஒரு கோடி நிதி நிவாரணம் வழங்கும் என செய்தி வந்ததாகவும், அதனை தமிழக பாரதிய ஜனதா கட்சி விமர்சனம் செய்ததாகவும் ஒரு செய்தி உலா வந்தது. 

இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தங்கள் கட்சியின் மீது அவதூறு பரப்பியதாகவும் அதற்கு ரூபாய் 100 கோடி நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைமை கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  

கொரோனா பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் ரூபாய் ஒரு கோடி நிவாரண நிதிக்கு கொடுப்பதாக தெரிவித்து இருந்தது. இதனை தமிழக பாரதிய ஜனதா கடுமையாக விமர்சித்து வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது. 

அந்த பதிவில் ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்துவிட்டு புறங்கையை நக்கிய திராவிட முன்னேற்ற கழகம் என மிக மோசமாக எழுதியிருந்தது.

இந்த நிலையில்  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு எல் முருகன் அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா அவர்களுக்கும் ட்விட்டர் நிர்வாகத்துக்கும் திராவிட முன்னேற்ற கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

இது குறித்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளியாகியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-  உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோமா உயிர்கொல்லி நோயை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக ஜாதி, மதம், இனம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் உதவி செய்ய ஆயத்தமாக இருக்கின்றனர். 

ஆனாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது அவதூறான செய்தியினை பரப்பி அதன் வழியாக அரசியல் லாபத்தை சம்பாதிக்கலாம் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. 

திராவிட முன்னேற்ற கழகம் அறக்கட்டளை சார்பாக ஒரு கோடி ரூபாய் திராவிட முன்னேற்ற கழகம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் ஒரு மாத சம்பளத்தையும் வழங்கி உள்ளதோடு, அவரவர் தொகுதி நிதியிலிருந்து இதற்கென தனியாக ஒரு தொகையை ஒதுக்கி உள்ளனர். 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் பின்புறம் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தை கரோனா பாதிப்படைந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வழங்கி உள்ளது. 

அது மட்டும் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அவர்களால் முடிந்த எல்லா உதவிகளையும் அந்தந்த இடங்களில் உள்ள மக்களுக்கு செய்து வருகின்றனர். ஆனால், இவை அனைத்தையும் முழுவதுமாக மறைத்தது போல இந்த நோய் தடுப்புக்கான நிவாரணத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் எதையுமே செய்யவில்லை. என்று அவர்களின் அதிகாரபூர்வமான வலைதள பக்கங்களில் அவதூறான செய்தியை பரப்பி வருகின்றனர். 

எனவே, அவதூறு பரப்பிய பாஜக நஷ்ட ஈடாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 100 கோடி வழங்கிட வேண்டும்." என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பாக வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK angry about bjp twitter post


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->