ஒரு கை பார்ப்போம்.. கொடுத்தால் 41 இல்லையென்றால் தனித்துப்போட்டி.! திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சி.!! - Seithipunal
Seithipunal


திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கிடுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த அளவிலான தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. இதனால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தொகுதி பங்கீடு குறித்து இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. அதே எண்ணிக்கையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக தரப்பில் அதிகபட்சமாக 20 தொகுதிகள் வரை மட்டுமே தரமுடியும் என கூறி வருகின்றனர். 

இதனிடையே, பேச்சுவார்த்தைக்கு வருமாறு காங்கிரஸ் கட்சி திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் தினேஷ் குண்டுராவ், கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் திமுக குழுவினரை சந்தித்து பேச உள்ளனர். இந்த கூட்டத்தில் திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஒரு கை பார்ப்போம்..  41 தொகுதி கேட்போம், இல்லையென்றால் தனித்துப்போட்டி 234 தொகுதிகளிலும் தனித்து நிற்போம். தன்மானம் காப்போம் என போஸ்டர் அடித்துள்ளனர். திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk and congress alliance poster


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->