பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்த அதிமுக மற்றும் திமுக.! எதற்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதால் இதனை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதனை எதிர்த்து தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். 

நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியவை, சேலம் உருக்காலை தனியாருக்கு வழங்க கூடிய வகையில் உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இருக்கும். 

சேலம் உருக்காலை திட்டம் என்பது அண்ணாவின் கனவு திட்டம் ஆகும். 4 விரிவாக்கத் திட்டத்தின் மூலம் சேலம் உருக்கு ஆலை இயங்கி கொண்டிருக்கிறது. மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கினால் உருக்காலை நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் நிலத்துடன் இருக்கக்கூடிய சேலம் உருக்கு ஆலை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உருக்காலை தனியார் மயமாக்க கூடாது. இந்த பிரச்சனை குறித்து முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். திமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் வந்து அழுத்தம் தர காத்திருக்கிறார்கள். இதற்கு உரிய அனுமதி நான் இப்போது தருகிறேன் என்று கூறினார். 

இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் உருக்காலை பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து பிரதமரையும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுப்போம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சினையை எழுப்பி அதைத் தடுப்பதற்கு உரிய ஆக்கப்பூர்வமான திட்டத்துக்கு  தமிழக அரசு, அதிமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk and admk join with salem factory issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->