அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சவாலை ஏற்ற திமுக.! பரபரப்பான அரசியல் களம்.!! - Seithipunal
Seithipunal


சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "திமுக உள்ளாட்சி தேர்தலைச் சீர்குலைக்க சதி செய்கின்றது. உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திமுகவிற்கு குட்டு வைத்து இருக்கின்றார். திமுக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் செயல்படுகின்றது என கூறினார். 

மேலும், அவர், "திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைமுறை குறித்து விமர்சிக்கப்படுகின்றது. 

என்னை பற்றி விமர்சனம் செய்யும் அளவிற்கு ஸ்டாலின் காந்தியும் இல்லை. அது போல நான் புத்தனும் இல்லை. ஸ்டாலின் முதுகில் ஆயிரம் அழுக்கை வைத்து கொண்டு என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கின்றார். என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த விதமான உரிமையும் இல்லை. 

ஒரு அமைச்சராக தன்னுடைய செயல்பாடுகளில் ஏதாவது தவறு இருந்தால் தாராளமாக விமர்சனம் செய்யலாம். ஆனால், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை,  நாங்கள் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தவில்லை. திமுக நீதிமன்றத்தை நாடியதால் தான் முறைப்படுத்தாத 9 மாவட்டங்களில் தேர்தல் தவிர்க்கப்பட்டது. 

முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகினோம். இன்றைய பேட்டியில் அமைச்சர் சி.வி. சண்முகம் நிதானத்தில் பேட்டி கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk anbazhagan says cv shanmugam challenge


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->