கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்?! ஒதுக்கிய திமுக! உறுதியான கூட்டணி கணக்கு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு மட்டும் தான் இன்னும் வரவில்லை. தேர்தலுக்கு கட்சிகள் மின்னல் வேகத்தில் தயார் ஆகி கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் பணத்தை கொட்டி இறைத்து கொண்டிருக்கிறார்கள். கூட்டணி கணக்குகளும் தினம் தினம் ஒரு கணக்காக வந்து கொண்டிருக்கிறது. 

திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. திமுக கொடுக்கும் இடத்திலும், மற்ற கட்சிகள் பெறும் இடத்திலும் இருப்பதால், கட்சிகளின் சுய மரியாதையை காப்பற்றும் வகையிலாவது சீட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் கூட்டணி கட்சி தலைவர்கள் காத்து கிடக்கின்றனர். 

திமுக தரப்பில் கட்சிகளுக்கு கொடுக்கப்படுவதாக சொன்ன தொகுதிகள் எண்ணிக்கை, அனைவருக்கும் அதிருப்தியையே கொடுத்துள்ளது. முன்னதாக வந்த தகவலின் படி, காங்கிரஸ் 15 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4 மதிமுகவிற்கு 3 விசிக மற்றும் இசுலாமிய கட்சிகளுக்கு தலா 2 என தெரிவிக்கப்பட்டது. 

நாடு முழுவதும் கிளைகளை கொண்ட கட்சி தலைவர் உட்பட, கொஞ்சமாவது எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் சொல்லும் அளவிற்காவது கௌரவமாக சீட் ஒதுக்குங்கள் என கெஞ்சலாகவே கேட்டிருக்கிறார்கள். பின்னர் பரிசீலித்து கொஞ்சம் சீட் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

அதன்படி காங்கிரஸ் 20 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6, மதிமுகவிற்கு 6, விசிக 3 மற்றும் மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தலா 2 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொமதேக, ஐஜேகே, தவாக கட்சிகளுக்கு நெஞ்சில் மட்டும் இடம் அளிக்க அறிவாலயம் தரப்பு முடிவு செய்திருப்பதாகவே கூறப்படுகிறது. 

இதே கட்சிகள் திமுக கூட்டணியில், கடந்த முறைகளில் இடம்பெற்ற போது போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையையும், தற்போதைய எண்ணிக்கையும் ஒப்பீட்டு பார்த்தால் அக்கட்சியினருக்கு தலைசுற்றலை தான் உண்டாக்கும். ஏனெனில் காங்கிரஸ் 2011 தேர்தலில் 63 தொகுதிகளிலும், 2016 இல் 41 தொகுதிகளிலும் போட்டியிட்டது. விசிக 2011 இல் 10 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த 2016 இல் மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலா 5 தொகுதிகளில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

மதிமுக 2006 இல் அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளிலும், 2011 இல் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் மொத்தம் 21 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கைகளை தற்போது எண்ணி பார்த்தால், கூட்டணி கட்சியினருக்கு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான் நினைவுக்கு வரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Alliance Seats share details for 2021 assembly elections


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->