கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கப்போகும் தொகுதிகள்.? காங்கிரஸுக்கு 15, மதிமுக 2, விசிக 2.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஏப்ரல் கடைசி வாரத்தில் அல்லது மே முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. 

இதனிடையே, 200 தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியானது. இதற்கு ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்து, கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகளை ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்ப்பந்திப்பாதக தகவல்கள் வெளியானது. ஆனால் இதற்கு கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை என ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்தார்.

மேலும், கூட்டணி கட்சிகளும் தனி சின்னத்தில் தான் போட்டுவிடுவோம், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர். தற்போது கூட்டணி கட்சிகள் அனைத்தும் அதிக தொகுதிகளை கேட்டு திமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் குறைந்தபட்சம் 25 தொகுதியாவது கிடைக்கும் என நம்பிக் கொண்டு இருந்தது, ஆனால் திமுக தரப்பில் அதிகபட்சம் 15 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சிபிஎம், சிபிஐ இரண்டுமே தலா 15 தொகுதிகள் கேட்டு வருகின்றனர். ஆனால் சிபிஎம் கட்சிக்கு 5, சிபிஐ 4 மொத்தம் 9 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. 

அதேபோல், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா இரண்டு சீட்டுகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வைகோ மற்றும் திருமாவளவன் திமுக மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk alliance seats for assembly election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->