உள்ளாட்சி தேர்தல்: யாருக்கு எத்தனை இடம்? திமுகவுடன் கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களில் தற்செயல் தேர்தல்கள் நடத்துவதற்கான தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

இன்று நவமி என்பதால் எந்த அரசியல் கட்சி சார்பிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. சுயேச்சிகள் மட்டும் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட விரும்புகின்றன.

இதனை அடுத்து இந்த ஒன்பது மாவட்டங்களிலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் எது என்பது குறித்து, திமுகவின் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் இடம் பட்டியலை சமர்ப்பித்து வருகிறது.

தற்போது வரை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்கள் போட்டியிட விரும்பும் பட்டியலை சமர்ப்பித்துள்ளனர்.

திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த இடங்களை ஒதுக்குவது என்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு வெளியாகி விடும். இதற்காக இன்றும் நாளையும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், திமுகவின் மாவட்ட செயலாளர்களுடன் இந்த பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர். இதில் சமரச தீர்வு காணப்படவில்லை என்றால், திமுகவின் தலைமை ன்முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk alliance party discussion for local body election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->