திமுக கூட்டணி கட்சி கூட்டம்.. எடுக்கப்பட்ட முடிவுகள்.! ஸ்டாலின் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


குடியுரிமை சட்ட திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கே.எஸ், அழகிரி, வைகோ, கோ.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளனர்.  

கூட்டத்திற்கு பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். , ‘குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். கையெழுத்து இயக்கத்திற்கு பிறகு அதன் பிரதிகளை ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளோம். நேரம் கிடைத்தால் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவோம்  என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk alliance meeting for signature movement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->