உள்ளாட்சி தேர்தலுக்கு தடைகேட்டு திமுக மேல்முறையீடு, அடித்து கூறிய நீதிபதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது  டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 8ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில், சரியான வார்டு வரையறை செய்யவில்லை. இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என திமுக மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி நடத்த வேண்டும். அதேசமயம் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் வார்டு வரையறை பணிகளை முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனால் திட்டமிட்டபடி 27 மாவட்டங்களுக்கு, தமிழகத்தில் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தீர்ப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி திமுக மீண்டும் உச்சநீதிமன்றம் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் திமுக மீண்டும் மீண்டும் பல காரணங்களை கூறி மேல்முறையீடு செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk again supreme court for election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->