இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியா?! பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்னும் திமுக அதிமுக உள்ளிட்ட போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. 

இன்று திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வரும் நிலையில் இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியை பொருத்தவரையில் தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் புதுச்சேரியில் காலியாக இருக்கின்ற காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக தரப்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இரண்டில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது. மற்ற கூட்டணி கட்சிகளான பாமக, தமாகா ஆகிய கட்சிகள் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து விட்டனர். இந்த நிலையில் கட்சித் தலைமை முடிவெடுத்தால், இடைத்தேர்தலில் தான் போட்டியிட தயார் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன், விஜய பிரபாகரன் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது என கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் குறித்து விஜயகாந்த் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தேமுதிக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk will continue in admk alliance


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->