கேப்டனிடம் இருந்து க்ரீன் சிக்னல்., தேமுதிகவினர் மிகுந்த உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்காக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும், தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் என்று விறுவிறுப்பாக தமிழக அரசியல் களம் சென்று கொண்டிருக்கிறது. 

திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் என்று ஒவ்வொரு கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை முதல் 5 நாட்களுக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் நாளை தொடங்கி திருத்தணி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். 

கடந்த மக்களவைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. 4 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக நான்கிலும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

தனது அரசியல் அங்கீகாரத்தை இழந்ததா தேமுதிக?! அதிர்ச்சியில் பிரேமலதா!! -  Seithipunal

இதற்கு காரணம் பாமகவிற்கு வழங்கப்பட்ட அதே தொகுதிகளை தேமுதிக கேட்டதாகவும், இதனை கொடுக்க அதிமுக மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து, தேமுதிக அமமுகவுடன் தற்போது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. 

இந்த நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நாளை முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். நாளை கும்மிடிப்பூண்டியில் தனது பிரச்சாரத்தை துவங்கி, தொடர்ந்து திருத்தணி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.


கேப்டனிடம் இருந்து க்ரீன் சிக்னல்., தேமுதிகவினர் மிகுந்த உற்சாகம்.! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmdk vijayakanth campaign will starts tomorrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->