மௌனம் கலைத்தார் விஜயகாந்த்! இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு! முற்றுப்புள்ளி வைத்த தேமுதிக!  - Seithipunal
Seithipunal


தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிப்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு ஆதரவை அளிக்கிறது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றி, சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுமே ஆதரவை தெரிவித்துவிட்ட நிலையில், தேமுதிக மட்டும் மௌனம் காத்து வந்தது. கடுமையான வதந்திகள் வெளியாகின. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறது என்று செய்திகள் கூட வந்தன. ஆனால் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விஜயகாந்த் இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk support admk in 4 constituency by election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->