திமுக என்றாலே திருட்டு கட்சி.! தில்லுமுல்லு கட்சி.! உச்சகட்ட கொந்தளிப்பில் பிரேமலதா.!! - Seithipunal
Seithipunal


பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு இடையே இன்று செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த, தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள், செய்தியாளர்களிடம் ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்தார், அதில் குறிப்பாக, திமுக என்றாலே திருட்டு கட்சி என்று தமிழக மக்களுக்கு தெரியும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்கள் எழுத்திப்பிய பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாகியுள்ளது. 

அதிமுக-தேமுதிக கூட்டணி இழுபறியா?

கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை குழப்பமும் இல்லை. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிப்பு, தலைமைக் கழகம் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்த விவகாரம் பற்றி?

தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவரான திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்திக்க சென்றது மரியாதை நிமித்தமாக தான். ஆனால், அவர்களை இப்படி கீழ்த்தரமான அரசியலை  சந்திப்பதற்கு வீட்டிற்கு வந்தவர்களை இப்படித்தான் அவமானப்படுத்துவதா? 

தன்னை சந்திக்க வந்தவர்களை முதலில் தெரியும் என்று சொன்ன துரைமுருகன், பின் தெரியாது என்கிறார். தெரியாத நபர்களை எப்படி உள்ளே விடுவார்? துரைமுருகன் வீடு திறந்த கிடைக்கிறது? நானும் வேலூரில் படித்து வளர்ந்தவள் தான், இப்படி கீழ்த்தரமான அரசியலை அவர் செய்வார் என எதிர்பார்க்கவில்லை.

துரைமுருகனை சந்திக்க போகும் முன் இல்லாதா மீடியாக்கள், வெளியே வரும்போது எப்படி வந்தது?  அரசியல் ரீதியாக எங்களை பழிவாங்கும் நோக்கத்தில் இதை திமுக அரங்கேற்றியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே எங்கள் மீது திமுக கடும் கோபத்தில் இருந்தது.

திமுக என்றாலே திருட்டு கட்சி, இதனை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., அப்போதே சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் திமுக என்றால் ‘தில்லு முல்லு கட்சி’ என்று நன்றாகவே தெரியும்'' என்று ஆவேசமாக பிரமீளாத அவர்கள் பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK PRESS MEET ABOUT DMK DURAIMURUGAN


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->