பட்டும் திருந்தாத பிரேமலதா..! கொந்தளிப்பில் தேமுதிக தொண்டர்கள்..! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சித் தேர்தல் சில ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அரசியல் கட்சிகள் இதற்கு தயாராகி வரும் நிலையில் திமுக விருப்பமனு வினியோகம் நேற்று நடைபெற்றது. இன்று அதிமுக தங்களுடைய விருப்பமனுவை துவங்கியிருக்கின்றது.

இதனை தொடர்ந்து தேமுதிகவும் உள்ளாட்சித் தேர்தல் விருப்பமனு விநியோகத்தை துவங்கியது. இதனை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடங்கிவைத்தார். இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச சுதீஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தேமுதிக தரப்பில் கூறப்படுகின்றது.

இந்த குழுவில் மோகன்ராஜ், இளங்கோவன், பார்த்தசாரதி, அக்பர் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த குழுவிற்கு சுதீஷை தலைமையாக போட்டது கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக என இரண்டு கட்சி இடமும் ஒரே நேரத்தில் தொகுதி பங்கீடு பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர் தான் சுதீஷ்.

அதன்பின்னர் கடைசி நேரத்தில் அதிமுகவுடன் அவசர கூட்டணியை ஏற்படுத்தி அல்லல் பட்டது தேமுதிக. எனவே, இவர் இந்த முறையும் பொறுப்பாக செயல்படுவாரா என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரேமலதா முடிவு கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk decision about local body election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->