தேமுதிக-அமமுக கூட்டணி வேட்பாளர் எடுத்த அதிரடி முடிவு.! அதிர்ச்சியில் தலைமை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நடைபெற்றுள்ள இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், தேமுதிக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் தனது பதவியிலிருந்து விலகுவதாக, தனது ராஜினாமா கடிதத்தை தேமுதிகவின் தலைமைக்கு அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஜெயபாலன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தேமுதிகவின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த ஜெயபாலன் தனது பதவியையும் ராஜினாமா செய்வதாக, தேமுதிக தலைமைக்கு தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அந்த அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, புதிய மாவட்ட செயலாளராக வேலாயுதம் என்பவரை நியமித்து தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk candidate resign his posting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->