திண்டாடும் தேமுதிக வேட்பாளர்கள்.. புலம்பும் நிர்வாகிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை தேமுதிக, அமமுகவுடன் இணைந்து சந்திக்கிறது. தேமுதிகவிற்கு அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதால், அந்த தொகுதியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். 

தேர்தல் நாள் நெருங்கி உள்ள நிலையில் அதிமுக திமுக கூட்டணியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருக்கிறது. இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தேமுதிகவின் தேர்தல் பிரசாரம் இல்லை. அதேபோல் பெரும்பாலான வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேட்பாளர்கள் கூறியபோது, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதைவிட நம் கட்சியின் வளர்ச்சியையும், வாக்கு சதவீதம் அதிகரிப்பு தான் முக்கிய நோக்கம் என அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. 

அதன்படி நாங்கள் தேர்தலை சந்திக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர் தான். அவர்களால் பல லட்ச ரூபாய் செலவு செய்ய முடியாது. அதிமுக, திமுகவில் அந்த தொகுதி வேட்பாளர் பல லட்ச ரூபாயை தேர்தல் செலவுக்கு அளித்து வருகின்றனர். ஆனால் எங்களுக்கும் எங்கள் கூட்டணி சார்பிலோ, கட்சியின் தலைமை சார்பில் 100 ரூபாய் கூட வழங்கவில்லை. 

வேட்பாளர்களிடம் இருக்கும் பணத்தை வைத்தே இது நாள் வரையில் பிரச்சாரத்தை செய்து வருகிறோம். இன்னும் சில நாட்கள் பிரச்சாரம் செலவுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. தேர்தலுக்கான வாகன செலவு, தொண்டர்களுக்கு உணவு போன்ற பிரச்சார செலவுக்கு கட்சி நிதி ஒதுக்கினால் கூட கட்சி நிர்வாகிகள் சிறப்பாக தேர்தல் பணியாற்றுவார்கள் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk candidate money issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->