அதிமுகவுக்கு தாவிய தேமுதிக வேட்பாளர்., அதிர்ச்சியில் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


கரூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சோமூர் ரவி, அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து இருப்பது, தமிழக அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு சோமூர் ரவி என்பவர் தேமுதிகவின் தலைமையால் அறிவிக்கப்பட்டு இருந்தார்.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்று விலகிய தேமுதிகவின் வேட்பாளர் சோமூர் ரவி, தற்போது அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நேரம்வரை, சோமூர் ரவி வேட்புமனு தாக்கல் செய்வார் என காத்திருந்த தேமுதிகவிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மாற்று வேட்பாளராக தேமுதிக சார்பில் கரூர் மாவட்ட பொருளாளர் கஸ்தூரி தங்கராஜ் போட்டியிடுவார் என்று தெரிகிறது. 

தேமுதிகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவர், அதிமுகவில் இணைந்து இருப்பது தேமுதிக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk candidate joint to admk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->