அதிமுகவின் முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்‌, 6.10.2021, 9.10.2021 ஆகிய தேதிகளில்‌ ஊரக உள்ளாட்சித்‌ தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கழகத்தின்‌ கொள்கை-குறிக்கோள்களுக்கும்‌ கோட்பாடுகளுக்கும்‌ முரணான வகையில்‌ செயல்பட்டதாலும்‌, கழகத்தின்‌ கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்‌ வகையில்‌ நடந்து கொண்டதாலும்‌. கழகக்‌ கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும்‌ அவப்‌ பெயரும்‌ உண்டாகும்‌ விதத்தில்‌ செயல்பட்ட காரணத்தினாலும்‌, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச்‌ சேர்ந்த அழகேசன்‌, (அகஸ்தீஸ்வரம்‌ ஒன்றியக்‌ கழகச்‌ செயலாளர்‌,
ஊராட்சி ஒன்றியக்‌ குழுத்‌ தலைவர்‌ ) இன்று முதல்‌ கழகத்தின்‌ அடிப்படை உறுப்பினர்‌ பொறுப்பு உட்பட அனைத்துப்‌ பொறுப்புகளில்‌ இருந்தும்‌ நீக்கி வைக்கப்படுகிறார்‌.

கழக உடன்பிறப்புகள்‌ யாரும்‌ இவருடன்‌ எவ்விதத்‌ தொடர்பும்‌ வைத்துக்கொள்ளக்‌ கூடடாது என கேட்டுக்கொள்கிறோம்‌ என தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dismissal from admk member


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->