வேலூர் தேர்தல் குறித்து தினகரன் வெளியிட்ட தகவல்!!  - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக 543 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் நடைபெற்றது,  தமிழகத்தின் வேலூர் தொகுதியில் மட்டும் பணம் சிக்கியதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ரத்து செய்யப்பட்ட போது போட்டியிட்ட அதே வேட்பாளர்களான, திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி  வேட்பாளர் புதியநீதி கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் போட்டியிட்டார்கள். 

ஜூலை 11 முதல் 18 முறை வேட்புமனு தாக்கல் செய்யலாம், ஜூலை 19 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் பரிசீலனை, ஜூலை 22 ஆம் தேதி வாபஸ் வாங்க கடைசி நாளாகும். ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவும் ஆகஸ்ட்  9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நடந்து முடிந்த மக்களை தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அத்தேர்தலில் போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்த நிலையில். ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கவுள்ள வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடாது என பொது செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dinakaran says about vellore election


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->