இதனால் தான் வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை.. தினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்!! - Seithipunal
Seithipunal


விருத்தாசலத்தில் செய்தியாளர்களை சந்தித்து தினகரன் பேசியதவது, அமமுக-வை விட்டு சிலர் சுயநலத்தோடு வெளியே சென்றிருப்பதால் அமமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. உண்மையான அடிமட்ட தொண்டர்கள் கட்சியை வழிநடத்துவார்கள். ஏற்கனவே அமமுகவில் நிர்வாகிகளாக இருந்தவர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் இனிமேல் அனைவரும் ஒன்று சேர்ந்து மேலும் சிறப்பாக கட்சியை வழிநடத்துவார்கள் என தெரிவித்தார். 

மேலும், வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த, வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தோம். கட்சியை பதிவு செய்துவிட்டு பிறகு தேர்தலில் நிற்கலாம் என பெரும்பாலான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமமுக-வை கட்சியை பதிவு செய்துவிட்டு, புதிய சின்னத்தில், நிலையான சின்னத்தில் போட்டியிடலாம் என முடிவு செய்துள்ளதாக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார். 
 
உடனே அமமுக தேர்தலில் நிற்க பயம் என சிலர் சொல்லுவார்கள். சொல்லுபவர்கள் என்ன வேணாலும் சொல்லட்டும். இந்த தேர்தலில் ஒரு சுயேட்சையாக ஒரு சின்னத்தில் நிற்போம். பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அங்கு வேறு சின்னத்தில் நிற்பதுபோல ஒரு நிலை வரும். இதை கருத்தில் கொண்டு தான் கட்சியை பதிவு செய்து புதிய சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dinagaran tells reason for why ammk not participated in vellore election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->