டெபாசிட் இழந்து.,அதிமுக மண்ணை கவ்வுவது உறுதி!! தினகரனின் ஆவேச பேச்சு!!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் பரமத்தில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளை ஒட்டி அமமுக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் அமமுகவின் துணை பொதுச்செயலாளர் தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, அதிமுகவை கடுமையாக சாடிய தினகரன், "நமது கட்சியின் கூட்டம் என்றாலே ஆட்சியாளர்களுக்கு பயம் வந்து விடுகிறது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் நீதிமன்றம் செல்லும் சூழ்நிலைக்கு நம்மை ஆளாக்குகின்றனர்.

இந்த கூட்டமும் ஜல்லிக்கட்டை காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டது. இப்படித்தான் திருவாரூர் தேர்தலுக்கும் திமுக, அதிமுக பயந்தது. கருணாநிதி செய்த துரோகத்தால், எம்ஜிஆரால் உருவானது தான் அதிமுக. அதையே தற்பொழுது அதிமுக அமைச்சர்களும் செய்கின்றனர். எடப்பாடி முதல்வராக கூடாது என எதிர்த்த செம்மலை கொடநாடு விவகாரத்தில் அவருக்கு ஆதரவளிக்கும் காரணம் என்னவாக இருக்கும்?

பதவி, அதிகாரம், பணம் இவற்றுக்காக எந்த கீழ்த்தரமான வேலைகளையும் செய்யலாம் என துரோகிகள் துணிந்து விட்டனர். இப்படிப்பட்ட துரோகத்தை வாழ்நாளில் நான் அனுபவித்தது இல்லை. காலம் முழுவதும் அமைச்சராக இருந்துவிட முடியும் என நினைக்கின்றனர். இதற்கெல்லாம் வரும், பாராளுமன்ற தேர்தலில் பதில் சொல்லும் நிலை வரும். 

ஜெயலலிதா இல்லை என்ற தைரியத்தில் கண்டபடி பேசிவருகின்றனர். கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி அதீத பதற்றம் அடைவதை நாம் கவனிக்க வேண்டும். இதை சிலைக்கடத்தலை போல சிபிஐக்கு ஏன் மாற்றக்கூடாது? எம்ஜிஆர் இருக்கும் வரை கட்சி தோல்வியை சந்திக்கவில்லை. ஆனால், தற்பொழுது கட்சியின் நிலை என்ன என்பதை மக்கள் அறிவர்.

ஆர்கே நகரில் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அமமுக, திருவாரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். எப்பொழுது தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். அதிமுக டெபாசிட் இழக்கும்" என ஆவேசமாக பேசியுள்ளார். 

English Summary

dhinakran angry speech about admk in namakkal


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal