#தருமபுரி || விசிக நிர்வாகிகளால் திமுக கொடிக்கும் சாதி சாயம்?! எங்க ஏரியா., விசிக கொடி., திமுக கொடியை நடவிடாமல் தடுத்த சிறுத்தைகள்.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை நடுவதற்கு, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றிய திமுக சார்பில், கம்பைநல்லூர் அடுத்த நவலை கிராமத்தில் திமுக கொடி கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த பகுதிகளில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் போது, திமுக கொடி கம்பம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

சாலை பணிகள் முடிந்த பின்னர், திமுகவை சேர்ந்த நவலை ஒன்றிய குழு உறுப்பினர் சசிகுமார் மீண்டும் திமுக கொடி கம்பத்தை அமைக்க நேற்று காலை குழி தோண்டி, அதில் கம்பியை நட்டார். 

இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தாமரைக்கணி, மூக்கையன், அழகரசு, கோவிந்தராசு உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தாகவும்,  "எங்க ஏரியாவில் விசிக கொடி மட்டும் தான் பறக்கும்" என்று கோஷமிட்டதாகவும், இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், 'நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் அமைக்கக் கூடாது' என்று கூறி கொடிக்கம்பம் அமைக்க நடப்பட்டு இருந்த இரும்பு பைப்பை அகற்றி சென்றார்கள். 

இதற்கிடையே, மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் செங்கண்ணன் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும், 'திமுக கொடி கம்பம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுமதி தராவிட்டால், போராட்டம் நடத்தி கொடிக்கம்பம் அமைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பகுதியில் இருந்து வந்த ஒரு பரபரப்பு தகவலின் படி, திமுக கொடி கம்பம் நடுபவர்கள் வேறு ஒரு சாதி என்றும், விசிக கொடி நடப்பட்டுள்ள இடம் வேறு ஒரு சாதியை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றும் சொல்லப்படுகிறது. ஆக, விசிக நிர்வாகிகளால் திமுக கொடிக்கும் சாதி சாயம் படிந்து விட்டதோ என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri DMK Flag Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->