சட்டசபை தேர்தலில் வெறும் 24 தொகுதிகள் மட்டும் தான்..! அதிர்ச்சியில் தலைமை.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வரும் 21 ஆம் தேதியன்று சட்டசபை தேர்தலானது நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றியடைந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆட்சியை காப்பாற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தீவிர தேர்தல் பிரச்சாரமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு படையெடுத்து., தங்களின் கட்சிக்காக வாக்குகளை தொடர்ந்து சேகரித்து வரும் நிலையில்., நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்திருந்தார். 

இதனைப்போன்றே காங்கிரஸ் கட்சியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரான ராகுல் காந்தியும் வந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு., வாக்குகளை தொடர்ந்து சேகரித்துக்கொண்டு வருகிறார். இந்த தருணத்தில்., அங்குள்ள யாவாத்ம லி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது கலந்து கொண்ட முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசியிருந்தார். 

Devendra Fadnavis, தேவேந்திர பட்னாவிஸ்,

இந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியாவது., கடந்த 2014 ஆம் வருடத்தின் போது நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது., காங்கிரஸ் கட்சியானது 42 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று இருந்தது. இந்த தேர்தலில் காண்கிற கட்சி 24 தொகுதிகளுக்கு மேலாக வெற்றி பெறுவது கடினம் தான் என்பதை ராகுல் காந்தி அறிந்து கொண்ட பின்னரே., தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள வில்லை. 

தோல்வியை அறிந்தே தற்போது வெளிநாடு பயணத்தில் உள்ளார். இங்கு பிரச்சாரம் மேற்கொள்ள வந்த ராகுல் காந்தி பேசும் சமயத்தில் ரபேல் ஒப்பந்தம்., ஜி.எஸ்.டி என பழைய பிரச்சனையை தான் பேசிக்கொண்டு இருந்தார். இந்த பிரச்சனைகளின் வெற்றிக்கு பின்னர் தான் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. ராகுல் காந்தியின் பிரச்சாரம் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சியின் வாக்குகளை கட்டாயம் அதிகரிக்க செய்யும் என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devendra Fadnavis speech about congress 24 place victory in election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->