பதவியை ராஜினாமா செய்த முக்கிய நபர்!! அதிர்ச்சியில் மத்திய அரசு!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வங்கிகளின் செயல்பாடுகள், பங்கு பரிவர்த்தனை வர்த்தகம், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அன்னிய செலாவணி நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை மத்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.

தற்போது மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்ததாஸ் பதவியில் உள்ளார். இதனிடையே மத்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சாரியா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துதார் 

2017 ஆம் ஆண்டிலிருந்து மத்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சாரியாவின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் அவரது ராஜினாமா தொடர்பாக பல்வேறு விதமான கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.

விரால் ஆச்சாரியாவுக்கும் மத்திய அரசுடன் நிலவி வந்த மோதல்போக்கு காரணமாக ரிசர்வ் வங்கியின் இதற்கு முன் 24-வது கவர்னராக  வகித்த வந்த உர்ஜித் பட்டேல் தனது பதவிக்காலம் முடியும் முன்னரே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். 

 உர்ஜித் பட்டேலின் வழியையே  விரால் ஆச்சாரியாவும் தற்போது பின்பற்ற காரணம் என்னவாக இருக்கும்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
 

English Summary

deputy governor resign his post


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal