வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு அரசு அறிவித்த அதிரடி திட்டம்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்து வருகிறார், விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்தநிலையில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். 

அதன்படி, வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் 3 ஆயிரம் ரூபாய் முன்வைப்புத் தொகை செலுத்தினால் தனியாக ப்ரீபெய்டு மீட்டரை அரசு பொருத்தும். இதற்கு வீட்டு உரிமையாளரின் ஒப்புதல் ஏதும் தேவையில்லை.

மேலும், வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். 200 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு இலவச மின்சாரம் என அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து 201 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 50 சதவீதம் மானியத்தை டெல்லி அரசு வழங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi government new announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->