கூட்டணியிலிருந்து காங்கிரசை கழட்டி விட்ட திமுக? முக்கிய நபராக பங்கேற்ற திருமாவளவன்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நாடுமுழுவதும் மக்களை திரட்டி இந்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்தம் கடந்த 10ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசிதழில் வெளியிட்டது. 

இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கைகளை திட்டமிட எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி டெல்லியில் இன்று இன்று மதியம் 2. 30 மணி அளவில் இக்கூட்டம் துவங்கியது. 

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்த்த நிலையில், பல கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக மீது காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணத்தால் திமுக கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi congress meeting dmk not attend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->