டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு உயர்ந்தது.! வேட்பு மனுவில் வெளியான தகவல்..!  - Seithipunal
Seithipunal


கடந்த ஐந்து ஆண்டுகளாக டெல்லி முதலமைச்சராக பதவி வகித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், புதுடெல்லி தொகுதியில், தற்போதைய முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 3-வது முறையாக போட்டியிடுகிறார். 

இந்த தேர்தலையொட்டி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார், அந்த வேட்ப்பு மனுவுடன் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில், அவரது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், மொத்த சொத்து மதிப்பு 3 கோடியே 40 லட்சம் ரூபாய் என கூறியுள்ளார். இது, 2015 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது இருந்த சொத்து மதிப்பை விட, 1 கோடியே 30 லட்சம் ரூபாய் அதிகம். 

அதேபோல், ரொக்கப்பணம் 7 லட்சத்து 69 ஆயிரத்து 736 ரூபாய் அதிகரித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் அசையா சொத்துக்களின் மதிப்பு, 85 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு அசையா சொத்துகள் உள்ளதாக அந்த பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi cm arvind kejriwal assert increased last five years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->