அதிமுக, பாஜக கூட்டணி கட்சிக்கும் சின்னம் பறிபோகிறது?! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! இறுதி நேரத்தில் இப்படி ஒரு சோதனையா?  - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகளுக்கு தடை விதிக்க, தமாகா தலைவர் வாசன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டடது. 

பழைய தமாகா கட்சியின் சின்னம் தான் சைக்கிள். இந்த தேர்தலில் புதிய தமாகாவிற்கு அதே சின்னம் கேட்கபட்ட நிலையில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்தால் சைக்கிள் சின்னத்தை வழங்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால்  தமாகா'வுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் சைக்கிள் சின்னம் வேண்டுமென்றால்  2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் நிபந்தனை பூர்த்தி செய்யப்படவில்லை. 

இதையடுத்து மேலும் ஒரு நிபந்தனையாக இந்த தேர்தலுக்கு மட்டுமே சைக்கிள் சின்னத்தை பயன்படுத்த வேண்டும் எனவும்  இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்தார். அதில், தமாகா' கட்சிக்கு நிரந்திரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கில் உடனடியாக எந்த இடைக்கால தீர்ப்பும் கொடுக்க முடியாது எனவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கின்  விசாரணையை  ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், தமாகா கட்சி  தஞ்சாவூரில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கட்சியும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவே வாய்ப்பு உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cycle symbol doubt for tmc party in lok sabha election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->