கேள்வி கேட்ட திமுகவிற்கு பஞ்ச் கொடுத்த சிவி. சண்முகம்.! கப்சிப்பான உடன் பிறப்புக்கள்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசிற்கு அதிமுக சிறிதும் எதிர்ப்பு தெரிவிப்பதே இல்லை. அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு அமல் படுத்த ஆளும் கட்சி வழிவிடுகிறது என கூறப்பட்ட நிலையில், "மாநில அரசின் அனுமதியை பெறாமல் மத்திய அரசு ஏதாவது திட்டத்தை செயல்படுத்த முனைந்தால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது," என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். 

மேலும், மத்திய அரசிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றும், மத்திய அரசை எதிர்த்து கொள்கை முடிவுகள் எடுக்கவில்லை என்றெல்லாம் திமுக தரப்பில் இருந்து தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ஒரு முக்கியமான கருத்தை சிவி சண்முகம் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பதிவிட்டுள்ளார்.

cv sanmugam,  seithipunal

அமைச்சர் சிவி சண்முகம், " ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு அனுமதி இல்லாமல், மத்திய அரசு செயல்படுத்த முன் வந்தால் நிச்சயமாக கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கும், சட்டத்தில் இடம் இருக்கிறது. தற்போது வரை மாநில அரசு எந்த திட்டத்திற்கும், அனுமதி கொடுக்கவில்லை. ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால், மாநில அரசின் அனுமதியை மத்திய அரசு கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு பெற்றிருக்கவில்லை எனில் அந்த திட்டம் ஒரு போதும் அனுமதிக்க படாது." என்று அந்த விஷயத்தை அழுத்தம், திருத்தமாக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். மேலும், "அவ்வாறு அமல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முழு உரிமை இருக்கின்றது" என கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளார்.

hydrocarbon, seithipunal

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம், இந்த விஷயத்தை அவர் கூறி இருப்பது, மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவர் கூறிய இந்த கருத்திற்கு திமுக எம் எல் ஏக்கள் எவரும், எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cv shanmugam speech in assembly


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->