இந்த திட்டத்தை கொண்டு வந்தால்., மத்திய அரசு மீதோ கிரிமினல் வழக்கு தொடருவேன்!! அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேச பேச்சு!! - Seithipunal
Seithipunal


நேற்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் மேலும் 23 இடங்களில் துவங்க அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி பேசினார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை துவங்க முடியாது எனவும் மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு இந்த விவகாரத்தில் வல்லுனர் குழு அமைத்து சாதக பாதகங்களை ஆராய்ந்து உரிய முடிவுவை  எடுக்கும் என்றும் சிவி சண்முகம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உயர்நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். மாநில அரசின் இசைவோ அல்லது அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் துவங்க முற்பட்டால் அதனை தடுத்து நிறுத்த நீதிமன்றம் சென்று சட்டத்தின் மூலம் உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும் என தெரிவித்தார், மீறி செய்தால் மத்திய அரசு மீது கிரிமினல் வழக்கு தொடுக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cv shanmugam says about hydro carbon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->