நாலு வார்த்தை பேச துப்பு இல்ல, உன் பூர்விகம் என்ன? ஸ்டாலினின் அஸ்திவாரத்தை சாய்த்த சி.வி.சண்முகம்.!  - Seithipunal
Seithipunal


ஸ்டாலின் காந்தியும் இல்லை, தான் புத்தனும் இல்லை என, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை, இன்று செய்தியாளர்களைச் சந்தித்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடாது என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடுத்து முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், டெல்லி உச்ச நீதிமன்றம் புதிதாக தொடங்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற அனைத்து 27 மாவட்டங்களுக்கும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்தலாம் என தெள்ளத்தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 

ஆனாலும், மீண்டும் மீண்டும்  உச்ச நீதிமன்றத்திற்குச்  செல்லும் ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் திமுகவுக்குக் குட்டு வைத்தார். தேர்தல் என்றாலே அஞ்சி நடுங்கும் நிலையில் திமுக இருக்கிறது. இதற்கிடையே தமிழக மாநில தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் நோட்டீஸ் ஒன்றை ஆணையத்துக்கு திமுக அனுப்புபி உள்ளது.  அதில், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் நடத்தாவிட்டால், தேர்தல் ஆணையத்தின் மீது அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளோம் என்பதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் உச்சநீதிமன்றத்தில் அளித்தனர். இதனையடுத்து தான் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், இப்போதும் திமுக தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறது. நல்ல வழக்கறிஞர்களிடம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கேட்டு ஸ்டாலின் தெளிவு பெற வேண்டும். அதேபோல ஸ்டாலின் தன் தகுதிக்கும் பதவிக்கும் ஏற்றது போல ஸ்டாலின் பேச கற்றுகொள்ள வேண்டும்.

என்னைப் பற்றி தனிப்பட்ட விமர்சனம் செய்கிறார். என்னைப் பற்றிப் பேசுவதற்கான எந்த தகுதியும் ஸ்டாலினுக்கு இல்லை என தெரிவித்த சி.வி.சண்முகம் ஸ்டாலின் காந்தியும் இல்லை, நான் புத்தனும் இல்லை. தனிப்பட்ட வழக்கை குறித்துப் பேச வேண்டும் என ஸ்டாலின் விரும்பினால், ஸ்டாலின் குறித்து இந்த ஆண்டு முழுவதும் பேசலாம். எனது அமைச்சர் பணிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டட்டும். தனிப்பட்ட முறையில் பேச வேண்டு என்றால் அவர் மேடை அமைக்கட்டும். அவர் என்னைக் குறித்துப் பேசட்டும், நான் அவரைப் பற்றிப் பேசுகிறேன். 

ஆனால், நாலு வார்த்தையை ஒழுங்காகப் பேசத் தெரியாத ஸ்டாலின், நா குளறி என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. முரசொலி என்ற மூன்றாம் தரப் பத்திரிகையில் என்னைப் பற்றி எழுதுகின்றனர். நான் ஊர், பெயர் தெரியாதவனா? நான் தமிழகத்தின் குடிமகன். ஸ்டாலினின் பூர்வீகம் என்ன? எங்கிருந்து வந்தேரியாக வந்தது அவரது குடும்பம்??

ஸ்டாலினின் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயந்தவன் நானில்லை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு தான் இந்த அரசியலில் நீடித்துக் கொண்டிருக்கிறேன், இதனை மீறிப் பேசினால், அதற்கான பதிலைத் தரத் தயாராக இருக்கிறேன். தைரியம் இருந்தால் என் பெயரைக் குறிப்பிட்டுப் பேசட்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cv shanmugam challenge to mk stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->