முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 5-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், சென்னையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் போராட்டங்கள் நடந்தன.

இன்று காலை,  விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் சி.வி. சண்முகம் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி ஆகிய இருவரின் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், மடிகணினி, அம்மா மினி கிளினீக் போன்ற திட்டங்களை தற்போதைய ஆளும் கட்சியினர் முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனர். 

இந்த போராட்டத்தினால் விழுப்புரத்திலிருந்து புதுவை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட  அ.தி.மு.க. செயலாளர்கள் சி.வி.சண்முகம், வளர்மதி மற்றும் தொண்டர்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cv shanmugam arested april 7


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->