#சற்றுமுன் || ஏ.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றில் முழ்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கிதாகவும், மயங்கிய நிலையில் அவர்களை மீட்ட ஊர் பொதுமக்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில்,

தடுப்பணை அருகே குறைவாக தண்ணீர் இருக்கும் இடத்தில் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென ஆழமான பகுதியில் சிறுமிகள் விழுந்து மூழ்கியதாக தெரியவந்துள்ளது.

ஒரே கிராமத்தை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நீர்நிலை அருகில் போக கூடாது என்று கண்டிக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது. 

மேலும் பெற்றோர் இந்த கோடைகால விடுமுறையில் பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய தருணம் இது.

இந்த சம்பவமே கடைசியாக அமைய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Nellikuppam A kuchipalaiyam River side accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->