விடுதலைக்கு முன்பே சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவில் ஒலிக்கத் தொடங்கிய குரல்... கலக்கத்தில் அதிமுக தலைமை.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளார். இதையடுத்து, முதலமைச்சருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ராமநாதபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளருமான அன்வர்ராஜா கலந்து கொண்டார். 

அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சின்னம்மா சிறையில் இருந்து வெளியே வந்து என்ன முடிவு எடுப்பார் என்பதை பொருத்துதான் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என கூறினார். 

சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வர உள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் இப்படி கருத்து தெரிவித்திருப்பது அதிமுக மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி ஆர் சரஸ்வதி பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு என்ன முடிவு எடுப்பார் என்பது அவருக்குத்தான் தெரியும். அதன் பிறகு தான்  நாங்கள் அதை பற்றி பேசுவோம். 

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு எடுக்கப்போகும் முடிவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனஅன்வர்ராஜா தெரிவித்துள்ளார். இப்போது பதவியில் இருக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 95% பேர் சசிகலாவால், டிடிவி தினகரனால் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டவர். இதனை அவர்களால் மறக்கவும், மறைக்கவும் முடியாது என தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் இருப்பவர்களால் புறக்கணிக்க முடியாது. ஆகையால், இப்போது ஒவ்வொரு குரலாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cr saraswathi says about admk members support sasikala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->