திமுக கூட்டணியில் மூன்று அதிருப்தி கட்சிகள்.! சற்றுமுன் மேலும் ஒரு கட்சி அதிருப்தி.!  - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த குழு காங்கிரஸ், கம்னியூஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி,விசிக-வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதில் காங்கிரசுடன் கூட்டணி தொகுதி உடன்படவில்லை என்று தெரிகிறது. அதே சமயத்தில் நேற்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளை ஒதுக்கியும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியும் திமுக ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

நேற்று இரவு திமுக மற்றும் விசிகாவுடன் திமுக நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் சுமுகமாக இல்லை என்ற தகவல் வெளியாகிய நிலையில், இன்று காலை நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூடிய தொகுதி பங்கீடும் சுமுகமாக இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாங்கள் கேட்ட தொகுதியை திமுக தர முன்வரவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM VS DMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->