கூடங்குளம் : அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.! மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, 

"திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கான இரண்டு அணு உலைகள் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. அதை ஒரு அணு உலை பூங்காவாக மாற்றுவதற்கான திட்டத்தோடு, மேலும் 4 அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு  எடுத்து வருகிறது.

அணு உலை பூங்காக்களால் உருவாகும் சுற்றுச்சூழல் அபாயம், அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதில் உள்ள நடைமுறை பிரச்சனைகள், பெரும் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு என பல்வேறு ஆபத்துக்கள் உள்ளன. ரஷ்யாவில் செர்னோபில், ஜப்பானில் புகுஷிமா உள்ளிட்ட பல்வேறு அணு உலை பூங்காங்களில் ஏற்பட்ட விபத்துக்களின் காரணமாக, ஏராளமான மக்களும் உயிரிழப்புக்கு ஆளாகியுள்ளார்கள். இந்த ஆபத்து இங்கும் ஏற்படும் என்பதால் மேலும் அணு உலைகளை அமைக்க வேண்டாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேலும் ஒரு இடியாக ஒன்றிய மோடி அரசு அணுக் கழிவுகளை கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே சேமித்து வைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது.

அணுக் கழிவுகளை நிரந்தரமாக கூடங்குளம் வளாகத்திலேயே வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்களிடையே தொடர்ந்து நிலவி வந்துள்ளது. இந்நிலையில், 3, 4 உலைகளுக்காக மற்றொரு அணுக்கழிவு மையத்தை, அந்த வளாகத்திலேயே வைப்பதற்கான அனுமதியை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது. 

இது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். முதல் அணு உலைக்கான அணுக்கழிவு  மையமே அமைக்க இயலாத நிலையில், இதுகுறித்து தெளிவான முடிவு எதுவும் எடுக்காமல்  அணுக்கழிவு மையங்களை வளாகத்திற்குள் அமைப்பது பேராபத்தை ஏற்படுத்தும்.

கதிர்வீச்சு ஆபத்து ஏற்படுத்தும் அணுஉலை பூங்கா அமைக்கும் ஒன்றிய அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதுடன், இதனை உடனடியாக கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. அணு கதிர்வீச்சால் பேராபத்து ஏற்படும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cpim say about koodankulam issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->