இளவேனில் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


எழுத்தாளர் தோழர் இளவேனில் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மணிலா செயலாளர் கே பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"1970களில் கலை, கலைக்காகவே என்ற இலக்கிய கோட்பாட்டை எதிர்த்ததோடு அல்லாமல், கலை மக்களுக்காக என்ற அடிப்படையில் அவருடைய படைப்புகள் அமைந்தன. சிம்சன் தொழிலாளர்கள் வீறுகொண்டு போராட்டம் நடத்திய போது, அந்த போராட்டக் களத்திற்கே நேரில் சென்று தோழர் வி.பி.சிந்தன் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி போராட்டத்தைப் பற்றிய கவிதையும், கட்டுரையும் எழுதியவர். அதேபோன்று அவர் நடத்திய ஏடுகளில் தமிழகத்தில் நாடு முழுவதும் உள்ள உழைப்பாளி மக்களின் போராட்டங்களை பற்றியும், பல்வேறு சமூகப் பிரச்சனைகள் பற்றியும் அவருடைய படைப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

\

தோழர் இளவேனில், கார்க்கி, பிரகடனம் உள்ளிட்ட பத்திரிகைகள் மூலம் இடதுசாரி கருத்துக்களை வலிமையாக கொண்டு சென்றவர். தன்னுடைய வசீகரமான எழுத்துக்களின் மூலம் இளைஞர்கள் பலரை இயக்கத்திற்கு ஈர்த்தவர். தோழர் வி.பி.சிந்தன் உள்ளிட்ட தலைவர்களோடு நெருக்கமான தோழமை கொண்டிருந்தவர். தமிழ் மீதும், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் மீதும் அளவற்ற பற்றுக்கொண்டிருந்தவர். அவருடைய இழப்பு எழுத்துலகத்திற்கும், குறிப்பாக, இடசாரி இயக்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவருடைய மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்." என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM Mourning to ILAVENIL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->