கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டி., திமுக-காங்கிரசின் பரிதாப நிலை.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நிலைமை பரிதமாக மாறியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் ஒன்று அல்லது இரண்டு இடங்களை பெறுவது கடினம் என்ற சூழ்நிலைதான் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியை தவிர்த்து விட்டு தனியாக திமுக மட்டும் பிரச்சாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினரும் திமுகவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. களத்தில் திமுக தனித்து விடப்பட்டுள்ளது. இதேபோல, காங்கிரஸ் கட்சியும் தனித்து விடப்பட்டுள்ளது. 

இந்த கூட்டணியில் மார்ச்சிஸ்ட கம்னியூஸ்ட் கட்சி இடம்பெறவில்லை. இந்த கட்சி தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், புதுச்சேரியில் சீட் ஒதுக்கப்படாததால் ஒரு தொகுதியில் தனித்து போட்டியிடுகிறது.

ஏற்கனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணி மோதலால் வெற்றி வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், மார்ச்சிஸ்ட கம்னியூஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுவது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cpim break alliance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->