#BIG_BREAKING: விராட் கோலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டிஸ்.! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களை தவறான வழிக்கு நடத்துகின்றன. அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையாக, இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் தொடர்ந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில், "ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்வது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்திருப்பது போல் தமிழகத்திலும் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது." என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் தெரிவித்ததாவது, "ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் 10 நாட்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. சூதாட்டத்தில் புழங்கும் பணம் எங்கு? யார்? கணக்கிற்கு செல்கிறது. இது குறித்து சரியான விளக்கத்தை தமிழக அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யக்கோரிய வழக்கில், விராட் கோலி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கங்குலி, நடிகர் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court notice issue to virat for ONLINE RUMMY ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->