தள்ளிப்போகும் சசிகலா விடுதலை.? புதிய சிக்கல்.. அதிர்ச்சியில் அமமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இவர் வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன் மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வாரமாக சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியானது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.  

சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை இயக்குனர் மனோகரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. அவர் காலை உணவு அருந்தினார். தற்போது எழுந்து நடந்தார். மூன்று நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துமனை சசிகலா இருப்பார். கண்காணிப்புக்காகவே ஐசியூவில் சசிகலா வைக்கப்பட்டுள்ளார் என கூறினார்.

இந்நிலையில், விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர், விக்டோரியா மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், 14 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்படுவார். இதனால் சசிகலா விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona positive in sasikala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->