கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. ஏற்கனவே நான் முழுமையாக தடுப்பூசி எடுத்துள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona infection confirmed to Karnataka Health Minister


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->