திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட போகும் உத்தேச தொகுதி பட்டியல்.!! - Seithipunal
Seithipunal


வரும் 17 வது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக-பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக-காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும் தயாராகியுள்ளது. இதில் திமுக தலைமையில் ஆன கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒதுக்கப்பட்டு, கூட்டணிக்கான கதவுகள் மூடப்பட்டன. 

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை என்பது குறித்த ஆலோசனை இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தேர்தல் குழுவுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கலந்து கொண்டு, தங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து விருப்பம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அழகிரி அவர்கள் தெரிவிக்கையில், ''நாங்கள் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். எந்தந்த தொகுதிகள் என்பது உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தாகியுள்ளது. எந்தந்த தொகுதிகள் என்பது நாளை அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதி புதுச்சேரி என்பது உறுதியாகிவிட்டது, மேலும் 9 தொகுதிகள் எவை என்பது நாளை அறிவிக்கப்படும் என்று கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின் படி, திமுக கூட்டன்பியில் காங்கிரஸ் போட்டியிடப் போகும் தொகுதிகள்,

புதுச்சேரி (உறுதியானது)
கன்னியாகுமரி, 
விருதுநகர், 
கரூர், 
கிருஷ்ணகிரி, 
திருவள்ளூர், 
ஆரணி,
தேனி, 
சிவகங்கை, 
திருச்சி என்று தகவல் கிடைத்துள்ளது.

English Summary

CONGRESS VOLUME LIST


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal