மீண்டும் ஒருமுறை ஊசலாடும் காங்கிரஸ்! இழந்த பெருமையை தக்கவைக்க வாய்ப்பு!  - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது. கடந்த மக்களவை தேர்தலிலும் பாஜக தனி பெரும்பான்மையுடன் தான் ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு  44 இடங்கள் மட்டுமே கிடைத்த நிலையால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி என்ற அந்தஸ்து கிடைக்காத நிலை ஏற்பட்டது.

ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி என்ற அந்தஸ்தை பெற வேண்டுமென்றால் தேர்தல் நடைபெற்ற மொத்த இடங்களில் 10% இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

அதாவது மொத்தமுள்ள 543 இடங்களில் குறைந்தபட்சம் 54 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்கும். இந்த முறையும் அந்த எண்ணிக்கையை எட்டாத நிலை காங்கிரசுக்கு ஏற்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி என்ற அந்தஸ்து கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சர் பதவிக்கு சமமான அந்தஸ்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு, மேற்கு, கிழக்கு என அனைத்து இடங்களிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை காங்கிரஸ் மொத்தமே 54 சீட்களை மட்டுமே பெறும் அல்லது பெறக்கூடிய நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress not eligible for authorized opposition parties


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->